-
12 போராளிகள் வீரமரணம்
திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து பருத்தித்துறைக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் இருவர் உட்பட 17 போராளிகள் சிறீலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்டுப் பலாலி முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டனர். 'போர் நிறுத்த நேரத்தில், பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் தளபதிகளும் போராளிகளும் கைது செய்யப்பட்டது இந்திய - சிறீலங்கா ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணானது' என தலைவர் பிரபாகரன் இந்திய அரசுக்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்துப் போராளிகளை உடன் விடுவிக்குமாறு இந்திய, சிறீலங்கா அரசுகளைக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் இந்திய அரசின் துரோகத்தனத்தால் 17 போராளிகளும் சயினைட் உட்கொண்டனர். அவர்களில் 12 போராளிகள் வீரச்சாவை அணைத்துக் கொண்டனர். இதுபற்றி மக்களுக்கு தலைவர் பிரபாகரன் விடுத்த அறிக்கையில் 'எமது போராளிகளை விடுவிக்க வேண்டுமென இந்திய அரசு சிறீலங்கா சனாதிபதி nஐயவர்த்தனாவிடம் உறுதியாகச் சொல்லி இருந்தால் இந்த அநியாயமான சாவுகள் நிகழ்ந்தே இருக்காது. இந்த வகையில் எமது போராளிகளுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பளிக்கும் பொறுப்பிலிருந்து இந்திய அரசு தவறிவிட்டது.
எமக்குப் பாதுகாப்பளிக்கும் அதிகாரமும் பொறுப்பபும் தார்மீகக் கடமைப்பாடும் இந்தியாவுக்கு இல்லை என்றால் இந்தியப் படைகள் இங்கிருப்பதன் அர்த்தம் என்ன? சனாதிபதி nஐயவர்த்தனாவுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் சமூக விரோத இயக்ககங்களுக்கும் பாதுகாப்பளித்து விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதுதான் இந்திய சமாதானப் படைகளின் நோக்கமா? எமது தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்குப் பதில் அவர்களைச் சிங்கள இராணுவத்திடம் ஒப்படைக்கத் துணைபோனது இந்திய சமாதானப் படையினர் எமது மக்களுக்கு இழைத்த மன்னிக்க முடியாத குற்றம். இந்த சூழ்நிலையில்தான் நாம் இனி யுத்த நிறுத்தத்தைப் பேணுவதில்லை என முடிவெடுத்தோம்' என்றார்.

0 கருத்துரைகள்: